Friday, October 25, 2013

சூரிய வேகம் Solar Pace

Scroll down for English
-----

சூரிய வேகம்.

இரவில் வானத்தை பார்க்கும்பொழுது நிலவும், நட்சத்திரங்களும், கோள்களும் மனதை மயக்கும். சற்று இருண்ட, ஒளி மாசற்ற பகுதியில் இருந்து பார்த்தல், நம் பால்வெளி (Milky-way) ஒரு மேகமாய் அழகாய் தெரியும். இந்த மயக்கும் அழகில் இருந்து விடுபட்டு ஒரு நிமிடம் வளியில் என்ன நடக்கிறது என்று பார்போம்.

பூமி தன்னைதானே சுற்றிகொள்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம் பூமி சீராக சுற்றவில்லை என்பது தெரியுமா? மற்ற கோள்களின் ஈர்ப்பு விசையினால் தள்ளாடி-தள்ளடிதான் சுற்றுகிறது.  இதை ஆங்கிலத்தில் wobbling என்பார்கள். பூமி தன்னைதானே என்ன வேகத்தில் சுற்றுகிறது தெரியுமா? பூமத்திய ரேகையில் நின்று கணக்கிட்டால் மணிக்கு 1667 கிலோமீட்டர்கள்  (KMPH) வேகம். இந்த வேகத்தில் நாம் பறந்தோமானால் சென்னையில் இருந்து டில்லிக்கு சுமார் ஒண்ணேகால் மணிநேரத்தில் சென்றுவிடலாம் ! ஆனால் வளியை பொறுத்தவரை இது மிக மிக குறைவான வேகமே. 

பூமி சூரியனை என்ன வேகத்தில் சுற்றுகிறது? மணிக்கு சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் கிலோமீட்டர்கள். (110000 KMPH). இந்த வேகத்தில் நாம் பறந்தோமானால் பூமியை ஒரு மணி நேரத்தில் 3 முறை சுற்றிவந்து விடலாம் !



சரி, சூரியன் என்ன செய்கிறது? ஒரே இடத்தில் நிற்கிறதா அல்லது அதுவும் எதையாவது சுற்றுகிறதா? இந்த கேள்விக்கு பதில் : சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பால்வளியின் மையத்தையும் சுற்றிவருகிறது. சூரியன் தன்னைத்தானே ஒருமுறை சுற்ற 27 நாட்கள் ஆகும்.  பால்வெளியின் மையத்தை மணிக்கு சுமார் எழு லட்சத்து பதிமூன்றாயிரம் கிலோமீட்டர் (713000 KMPH) வேகத்தில் சுற்றுகிறது! இந்த வேகத்தில் நாம் பறந்தோமானால் பூமியைஒரு மணி நேரத்தில் 20 முறை சுற்றிவந்து விடலாம் !

பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது. சூரியன் பால்வளியின் மையத்தை சுற்றுகிறது. பால்வளியின் மையத்தில் என்ன இருக்கிறது? இன்னுமொரு சூரியனா? இல்லை. பால்வளியின் மையத்தில் இருபது  மாபெரும் கருந்துளை (super massive black-hole). பால்வெளியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் அந்த மாபெரும் கருந்துளையைத்தான் சுற்றிவருகின்றன.  கருந்துளையின் தோற்றதையும் கோட்பாடுகளையும் பற்றி தனியாகத்தான் எழுதவேண்டும். 

சூரியன் சுற்றுகிறது என்றால், சூரிய குடும்பமே சுற்றுகிறது என்று பொருள். சூரிய குடும்பத்தில் கோள்களும், Asteroids எனப்படும் எறிகற்களும், கோள்களை தாண்டி இருக்கும் ஊர்ட் மேகமும் (Oort cloud), அதையும் தாண்டி உள்ள பிளாஸ்மா (Plasma) எனப்படும் அயன் துகள்களும் (ionized particles) உள்ளன. இதனை சூரிய குமிழி (Solar Bubble) என்று அழைக்கிறோம்.

சூரிய குமிழி பால்வெளியில் எங்கு செல்கிறது என்று பார்போம். சூரிய குமிழி பால்வெளி மையத்தை சுற்றும் அதை வேளையில் மணிக்கு சுமார் 25000 கிலோமீட்டர் (KMPH) வேகத்தில் பால்வெளியை சுற்றும் பாதையில் இருந்து 90 டிகிரி மேலெழும்பி பயணிக்கிறது.முப்பரிமாண graph இல் பால்வெளியின் மையத்தி சுற்றும் திசையை x-axis என்று கொண்டால் மேலெழும்புதல் z-axisஇல் ! இதோடு நிற்கிறதா என்றால் இல்லை, முப்பரிமாணத்தில் y-axis இருக்கிறதே, அந்த பாதையிலும் சூரிய குமிழி பயணிக்கிறது, அதுவும் மணிக்கு 72000 கிலோமீட்டர் வேகத்தில். அந்த y-axis பயணம் ஹெர்குலிஸ் உடுமண்டலத்தை (Constellation of Hercules) நோக்கி செல்கிறது. ஹெர்குலிஸ் உடுமண்டலம், சூரியனில் இருந்து சுமார் 380 ஒளி வருடங்கள் தொலைவில் இருக்கிறது. ஒரு ஒளி வருடம் என்பது 9460000000000000 கிலோமீட்டர்கள்.  அதாவது, சூரிய குமிழி இன்னும் 12500 கோடி வருடங்கள் கழித்து ஹெர்குலிஸ் உடுமண்டலத்துடன் மோத வாய்பிருக்கிறது. அப்படி மோதினால் கண்டிப்பாக உலகம் அழியும் !!!    

வளியில் இருந்து சூரிய குமிழியை பார்த்தல் ஒரு விண்வெளிக்கலம் படு வேகமாக, எல்லாற்றையும் உள்ளிட்ட சுமார்  916336 KMPHஇல்  செல்வது போல் இருக்கும். அதில் நாம் தற்போதைக்கு பத்திரமாக பயணித்துகொண்டு இருக்கிறோம் !!!


Solar Pace.


If you look up at the night sky, the moon, stars and planets makes you dizzy. If you lookup from a dark, light-pollution free area, our Milky-way galaxy will be visible as a shining cloud stretch. Leaving this awestruck, think for a minute of all that's happening at the same time in space...

Earth revolves itself, we all know. Earth does not revolve in a regular-manner. It wobbles a bit. Thats' due to push-pull effects of other planets. Earth rotates itself at a speed of 1667 KMPH. If we fly at this speed, we will reach Delhi in approximately 1 hour 15 minutes from Chennai. But as far as the space is concerned, this speed is too slow.

Earth orbits Sun at the speed of 110000 KMPH. If we fly at this speed, we can go around the earth 3 times in an hour. 

Sun is not at stand-still. It revolves itself once in 27 days and orbits the galactic centre at the speed of 713000 KMPH. At this speed, we can go around the earth 20 times an hour.

Earth orbits sun and sun orbits galactic centre. There is a super massive black hole at the galactic centre. Every star in the galaxy orbits the black hole. Separate narration is needed to write about black holes. 

Sun family consists of the sun, planets, planetoids, asteroids, oort cloud and beyond (such as plasma - charged particles). We call this complete set up as Solar Bubble. The whole solar bubble orbits the galactic centre. 


Assume a 3D graph now. While solar bubble orbits the galactic centre in x-axis, the bubble travels upwards (at 90 degrees) on z-axis at the speed of 25000 KMPH approximately. Not only that, the bubble travels in y-axis too. It travels towards the Constellation of Hercules at a speed of 72000 KMPH. The Constellation of Hercules is 380 light years away. After 12500 Crores of years, our solar bubble may colloid with Constellation of Hercules, by which our solar bubble may get disturbed or destroyed !

Overall, while outside watching the sky, the Earth and you on it make this incredible spaceship travelling within our galaxy at a speed of 919336 KMPH !!!